திங்கள், 9 ஜூலை, 2012

அளவீட்டியல் / Systems of Measurement


  1. 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது? - பன்னாட்டு அலகு முறை (SI - System International)

2. SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை? - ஏழு

3. SI அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை? - இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்)

4. நீளத்தின் அலகு என்ன? - மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்)

5. நிறையின் அலகு என்ன? - கி.கிராம்

6. காலம் / நேரத்த்தின் அலகு என்ன? - வினாடி

7. மின்னோட்டதின் அலகு என்ன? - ஆம்பியர்

8. வெப்பநிலையின் அலகு என்ன? - கெல்வின் (பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)

9. விசையின் அலகு என்ன? - நியுட்டன்

10. வேலையின் அலகு என்ன?- ஜுல்

11. பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது? - மோல்

12. ஒளிச்செறிவின் அலகு என்ன? - கேண்டிலா

13. தளக்கோணத்தின் அலகு என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்)

14. திண்மக் கோணத்தின் அலகு என்ன? - ஸ்டிரேடியன்

15. துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? - பியரி வெர்னியர் (பிரான்ஸ்)

16. வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? - (முதன்மை கோல் பிரிவு - துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ

17. வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் - சுழிப்பிழை எனப்படும்

18. வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் - நேர் பிழை

19. வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் - எதிர் பிழை

20. பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? - திருகு அளவி

21. மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? - திருகு அளவி

22. ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு_____க்கு நேர் தகவில் இருக்கும் - சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்

23. ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு

24. இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? - 10 மி. கிராம்

25. இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும் - நிலைப்புள்ளி எனப்படும்

26. திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? - 0.01 மி.மீ
27. ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் - நிறை எனப்படும்
28. ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? - கலிலியோ

புதன், 4 ஜூலை, 2012

சிந்து சமவெளி நாகரீகம் / Indus Valley Civilization

1.ஹரப்பா பண்பாடு அல்லது சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய அடிப்படை சான்றுகளாக திகழ்வது எது? - சர் ஜான் மார்ஷ்ல் குழுவின் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்

2. சிந்து சமவெளி நாகரீக காலம் எது? - கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை

3. ஹரப்பா நாகரீக காலம்_______ காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம் (அ) சால்கோலித்திக் காலம்(Chalcolithic Period)

4. சிந்து சமவெளி நாகரீகம் ஒரு________ நாகரீகம் - நகர நாகரீகம்

5. வெண்கலம் புதிதாக உருவக்கப்பட்ட காலம் எது? - செம்பு கற்காலம்   

6. ஹரப்பா அமைந்துள்ள இடம் எது? - ராவி நதிக்கரை (சிந்து நதியின் கிளை)

7. மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம் எது?- லார்கானா மாவட்டம் (தற்போதய பாக்கிஸ்தானின் சிந்து மாகாணம்)

8. மொகஞ்சதாரோ என்ற வார்த்தைக்கு என்ன பெயர்? - இறந்தவர்களின் மேடு என்று பெயர்

9. தானியக்களஞ்சியம், பெருங்குளம் மற்றும் மக்கள் கூடும் நகர மன்றம் ஆகியவை காணப்பட்ட இடம் எது?- மொகஞ்சதாரோ

10. சிந்து சமவெளியிள் கண்டெடுக்கப்பட்ட வெளி நாட்டு சின்னங்கள் எந்த நாட்டை சேர்ந்தது? - மெசபடோமியா

11. இந்தியாவில் ஹரப்பா நாகரீகம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது? - லோத்தல்(குஜராத்) மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)

12. சிந்து சமவெளி மக்கள் செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? - கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்)

13. சிந்து சமவெளி மக்களின் முக்கிய துறைமுகம் எது? - லோத்தல்(குஜராத்)

14. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது? - கோதுமை மற்றும் பார்லி

15. சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள் பெயர் என்ன? - பசுபதி (எ) சிவன்

16. சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட பெண் கடவுள் பெயர் என்ன? - அன்னை

17. சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை? - சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து

18. உலகிலேயே முதன் முதலில் பருத்தி பயிரிட்டவர்கள் யார்? - சிந்து சமவெளி மக்கள்

19. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய விளையட்டு பொருட்கள் எதனால் செய்யப்பட்டவை? - டெரகோட்டா (சுடுமண்)

20. சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை என்ன? - சித்திர எழுத்து முறை (படங்கள்)

21. சிந்து சமவெளி பெண்டிரின் உடை என்ன? - குட்டை பாவாடை

22. மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது? - செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை

23. மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு எது?- தானியக்களஞ்சியம்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

தாவர செல் / Planet Cell


1. செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? - தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன்

2. உயிரனங்களின் அடிப்படை அலகு எது? - செல்

3. செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் - செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்

4. செல்லைக் கண்டறிந்தவர் யார்? - ராபர்ட் ஹீக்

5. செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? - உட்கரு

6. உட்கருவை கண்டறிந்தவர் யார்? - ராபர்ட் ப்ரெளன்

7. குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? - உட்கரு

8. உட்கரு சவ்வின் அடிப்படையில் உயிரனத்தின் இரு வகைகள் யாவை? - புரோகேரியாட்டுகள் மற்றும் யுகேரியாட்டுகள்

9.  மேம்பாடு அடைந்த செல் அமைப்பை கொண்ட செல்_______எனப்படும் - யுகேரியாட்டுகள்

10. உட்கரு மணியை கண்டறிந்தவர் யார்? - ஃபாண்டனா

11. ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் உட்கரு மணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?- 3 முதல் 4

12. உட்கரு மணியில்_______மற்றும்________உள்ளது - R.N.A. மற்றும் புரதம்

13. குரோமேட்டின் வலை குரோமோசோம்களாக மாறுவது - செல்லியலின் இடை நிலை

14. புரோட்டோபிளாசத்தை கண்டுபிடித்தவர் யார்? - பிர்கிஞ்சி மற்றும் மோல்

15.  மேம்பாடு அடையாத தாவரங்களில் எளிய செல் அமைப்பை கொண்டவை_______எனப்படும் - புரோகேரியாட்டுகள்

16. செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுவது எது? - மைட்டோகாண்ட்ரியா